"மாரி மலை முழைஞ்சில்" பாசுரத்தின் ஈற்றடியில் "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்" என்பதில் நோக்கியது இம்மாலைக்குறிப்பு.
தாம் வந்த காரியம் இன்னது என்பதை சொல்லாதே காரியம் ஆராய்ந்து அருள் எண்ணக்கூடாது. கீழ் பாட்டிலே, எம்மைக்கடாக்ஷித்து அருள வேணும் என்று பிரார்த்தித்த ஆய்ச்சிகளை நோக்கி கண்ணபிரான் "ஆயர் சிறுமிகளே! என்னிடம் பலர் வந்து 'கடாக்ஷிக்க வேணும் - கடாக்ஷிக்க வேணும்' என்பதுண்டு; கண்ணைத்திறந்து பார்ப்பது தானே கடாக்ஷம்; பார்த்தாயிற்று போங்கள்" என்றால், உடனே ஒரு காரியமாக வேண்டும் என்று ப்ரஸ்தாபிப்பர்கள். "நீங்களும் அப்படி ஒரு காரியத்தை உத்தேசித்து வந்தவர்கள் தானே!; அது இன்ன காரியம் என்பதை சொல்லி விடுங்கள்" என்று பணித்தான்.
அது கேட்ட ஆய்ச்சிகள் "பிரானே! திருப்பள்ளியறையில் சயனித்த படியே என்ன காரியம் என்று கேட்டருளாதே, உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காஸனத்திருந்து அதன் பின் யாம் வந்த காரியம் இன்னது என்பதை ஆராய்ந்து அருள்" என்றார்கள்.
எனவே இங்கு "ஆராய்ந்து அருள்" என்பதற்கு ஆலோசித்தருள் அன்பாடு பொருள் அன்று; "வினவி அருள்" என்பது பொருள். இவர்கள் வந்த கார்யத்தை இப்பாட்டிலும் சொல்லவில்லை, மேல் பாட்டிலும் சொல்லவில்லை என்று பலர் நினைப்பார்கள். இரண்டு பாட்டிலும் சொல்லியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து அறிய வேணும். ஆராய்ச்சியில் வல்லவர்களே இதை அறிய வல்லவர்கள் என்று காட்டவே ஆராய்ந்து அருள் எனப்பட்டது.
கீழே எட்டாம் பாட்டிலும், ஆராய்ந்து அருள் என்றுள்ளது. இங்கும் அங்கனமேயுள்ளது. ஆனால் பொருளில் வாசியுண்டு. அங்கு "அருள்வான்" என்பது அருள் என்று குறைந்து கிடக்கிறது, "தேவாதி தேவனை நாம் சென்று சேவித்தால் (அவன்) ஆராய்ந்து ஆவாவென்று அருள்வான்" என்றதங்கு. இங்கு அருளவேண்டுமென்று வேண்டுகோள். அருள்...ஏவலோறு வினை முற்று ஏங்க. நுனி புல் மேய்வார் கடக்க நின்று "ஸாரம் து ஸாரஸ்வதம் ஜாநேதே நிதரம்" என்னும்படியான ஞானப்பெருமை வாய்ந்தவர்கள் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் வந்த கார்யம் இப்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது என்று அறியலாம்.
"வந்த கார்யம்" என்றது வருகைக்கு உறுப்பான கார்யம் என்றபடி. "யத் கார்யார்த்தம் வயம் ஆகதஸ்மஹா, தத் கார்யம் விசாரயேத்யர்த்தாஹா ". இவர்களுக்கு உத்தேச்யமான கார்யம் இப்பாட்டில் தெரிவிக்கிறது கேண்மின் - கண்ணபிரான் பள்ளி கொள்ளும்போது "ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே" என்றும், "அம்மாமலர்க்கண் வளர்கின்ற எண்ணன் செய்கேனே" என்றும் ஈடுபட்டு, "அரவணையாய் ஆயரேரே துயிலெழாயே" என்று திருப்பள்ளி உணர்த்தவேண்டுமென்பது ஒரு கார்யம். இக்கார்யம் நிறைவேறியாயிற்று.
அடுத்த கார்யங்கள் -
உள்ளிருந்து புறப்பட்டருளும் அழகு காணவேணும், சீரிய சிங்காசனத்து வீற்றிருக்கும் அழகு காணவேணும், பல்லாண்டு பாடவேணும் என்பன. இவை ஒவ்வொன்றும் சமப்ரதரங்களான கார்யங்கள். புறப்பட்டு அருளும் அழகு காணுகையும், வீற்றிருக்கும் அழகு காணுகையுமாகிற கார்யங்கள் ஆனவை விண்ணப்பம் இப்பாட்டிலேயே சித்தித்துவிட்டன. பல்லாண்டு பாடுகையாகிற கார்யம் அடுத்த பாட்டில் நிறைவேறுகிறது.
பெருமாள் புறப்பட்டருளும் அழகுண்டே, அது வாசமகோசரம். இது விசேஷித்து நம்பெருமாள் சந்நிதியிலே அனுபவிக்கத்தக்கது. श्री ராமாயணத்தில் பெருமாளுடைய புறப்பாட்டின் அழகை "பர்வதாதிவ நிஷ்க்ரம்ய சிம்ஹோ கிரி குஹாசயஹா" என்று வால்மீகி வர்ணித்தார். அதையே ஆண்டாள் இப்பாட்டில் நான்கு அடிகளாலே விவரித்து உரைத்தாள்-
"மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு"
அதற்க்கு மேல் "உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி" என்பதனால் நடையழகு காணும் ஆசை தெரிவிக்கப்பட்டது. அசோக வனத்தில் அலற்ற நின்ற பிராட்டி "தன்யா பச்யந்தி மே நாதம் சிம்ஹ விக்ராந்த்த காமினம்" என்று பெருமாளுடைய நடை அழகை நினைந்து புலம்பினாள். "அக்ரதச்தெ கமிஷ்யாமி ம்ருதுனந்தி குச கண்டகான்" என்று சொன்னவள் முன்னே போகாமல் "அக்ரத ப்ரய்யௌ ராமஹ சீதா மத்யமே சுமத்யமா" என்னும்படி பெருமாளை முன்னே போக விட்டுத் தான் பின்னே போனது அவருடைய நடையழகைக் காணவேண்டி அன்றோ? அந்த நடையின் சிறப்பு விளங்கவே முனிவனும் யயௌ என்னதே ப்ரயயௌ என்றான். சுமித்திரை இளையபெருமாளுக்கு வனப்ரயாண அனுமதி தரும் இடத்து "ராமே ப்ரமதம் மஹர்ஷி புத்ர ப்ராத்ரி கச்சதி" என்று கோரினவள் பெருமாளுடைய நடையழகிலே துவக்குன்னதே கொள்ளை என்றன்றோ சிக்ஷித்தது? கச்ச மாதுல குலம் என்ற இடத்தில் உள்ள கச்சது போலன்றே இந்த கச்சது?
இனிக் கண்ணபிரானுடைய நடையழகு பற்றி சொல்லவேணுமோ? கானகம் பாடி உலாவி கருஞ்சிறுக்கன் குழலூதினபோது, மேனகையோடு திலோத்தமை அரம்பை உருபசியவர் வெல்கி மயங்கி, வானகம் பாடியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர்தாமே" எனும்படியாக அன்றோ கண்ணபிரான் உலவுதல்?
இவ்விதமே நாம் ஆசார்யர் எம்பெருமானுடைய திக் விஜய யாத்திரையில் எங்கும் சிம்ஹ கர்ஜனையாகவே இருந்தபடியை சொன்னவாறு - "பூதரும்போலே" அங்கு இங்கு உவமையாகக்கூறியிருந்தாலும் உபமான அர்த்தங்களுக்கு உபமேயம் தன்னில் உப சம்ஹாரம் என்று கொள்ளவேணும். உன் கோயில் என்று ஸ்வாமியின் திரு அவதார ஸ்தலமான sri பெரும்பூதுரை விவரிக்கிறது. அங்கு நின்றும் பெருமாள் கோயில் ஆகிய காஞ்சிபுரிக்கு எழுந்தருளியும் திருமலைக்கு எழுந்தருளியும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு எழுந்தருளியும் திருநாராயண புரம் எழுந்தருளியும்...இங்ஙனே போந்தருளும் படியை சொல்லுகிறது.
சௌ.வை.ராமன்
ஜனவரி 6, 2013

No comments:
Post a Comment