கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னை பாடி பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்னாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனய பல் கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கூடி இருந்து குளிர் மாலை - கூடாரை வெல்லும் சீர் பாசுரத்தின் ஈற்றடியில் கூடி இருந்து குளிர்ந்தென்றதை நோக்கியது இம்மாலை குறிப்பு.
இன்னாரோடு கூடி இருந்தென்று சொல்லிற்றில்லை ஆகிலும் கூட தகாதவர்களை விலக்கி கூடியே இருக்க வேண்டியவர்களோடு கூடுகைதான் இங்கு விவக்ஷிதம். குலசேகர ஆழ்வார் ஒரு திருமொழியிலே,
"மெய்யில் வாழ்க்கையை மெய்யெனகொள்ளும் இவ்வையம் தன்னோடும் கூடுவதில்லை யான்",
"நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம்தன்னோடு கூடுவதில்லை யான்",
"மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரிநாரோடும் கூடுவதில்லை யான்",
"உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தோடும் கூடுவதில்லை யான்",
"தீதில் நன்னெறி நிற்க அல்லாது நீதியாரோடும் கூடுவதில்லை யான்"
என்று பன்முறையும் கூறினார் கூடத்தகாதவர்களை. "வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்சரந்தஹ வ்யவஸ்திதிஹி, ந சௌரி சிந்தா விமுக ஜன சம்சாச வைசசம் " என்னும் ச்லோகத்தையே அப்பாசுரங்கள் விவரித்தன ஆயின. அன்னவர்களோடு கூடுவதை விலக்கிக்கொள்கைதானே சிறந்த குளிர்ச்சி ஆகும். அதற்கு மேல் கூடத்தக்கவர்களோடு கூடவும் பெற்றால் குளிர்ச்சியைப்பற்றி கூறவும் வேண்டுமோ?
கூடதக்கவர்கள் யாவர் என்னில்? குறிக்கொண்டு கேண்மின்:
- "மறம் திகழு மனமொழித்து வஞ்சமாற்றி வன்புலன்களடக்கி இடற்பாரத்துன்பம் துறந்து இரு முப்போழுதேத்தி எல்லை இல்லா தொல் நெறிக்கண் நிலை நின்ற தொண்டர்",
- "தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாங்குழுமி திருபுகழ்கள் பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகியேத்தும் அவர்கள்",
- "அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்கள்",
- "தென்னரங்கனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்ட மேவி அலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்",
- "பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்றிருக்கும் அவர்கள்",
- "பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது கொண்டிருக்கும் அவர்கள்",
- "த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்களாய் ராமானுஜ பாதாம்போஜ சமாஸ்ர்யணசாலிகளாய் இருக்குமவர்கள்", மேலும்,
- "அபகத மதானைரந்திமோபாய நிஷ்டைரதிகத பரமார்த்தை அர்த்தகாமநாபேக்ஷை நிகில ஜன சுஹ்ருத்பிஹி நிர்மித க்ரோத லொபைஹி வர வர முநிப்ருத்யை அஸ்து மே நித்ய யோகஹ" என்று நித்ய குதூஹலசாலிகளாய், "மனவாளமாமுனிவன் பொன்னடியாம் செங்கமலபோதுகளை உன்னிச்சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்" என்கிற அத்யவசாயத்தில் தலைநின்றிருக்குமவர்கள்
- உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ப்ராவண்யமும் ஆஹார நியதியும் அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருதியும் உடையராயிருக்குமவர்கள், பின்னும்,
- "தம் நெஞ்சில் தோற்றியதே சொல்லி" உலகத்தை வஞ்சியாதே, முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனை பேசுமவர்கள், நித்ய சஹவாச யோக்யர்கள்,
- ஆசார்யர்கள் அனைவரும் முன்னாசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளை கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னிலே நிலை நின்றிருக்குமவர்கள், நித்யானுபவ யோக்யர்கள்.
முரளி
ஜனவரி 10, 2013
Wish you all happy Bhogi/Pongal.
No comments:
Post a Comment