இரக்க மாலை
அன்று இவ்வுலக பாசுரத்தின் ஈற்றடியில் இன்று யாம் வந்தோம் இரங்கென்று இருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு.
கண்ணபிரானை நோக்கி இறங்கவேணும் பிரானே ! என்று பிரார்த்திக்கப்படுகிறது.
"ந அசௌ புருஷ காரென ந சாபி அனன்யென ஹேதுனா ,கேவலம் ச்வெச்சையவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாச்சன "என்றும் நிர்ஹெதுக கடாக்ஷேன மதீயேன மகாமதே, ப்ராப்யோஹம் ந அன்யதா
ப்ராப்யஹ -- என்றும் அவன் தானே அருளிசெய்திருக்க, கடாக்ஷித்து அருள வேணும், இரங்க வேணும் என்றும் தத்வ வித்துக்கள் பிரார்த்திக்க தகுமோ என்று சந்தேகப்படுவதுண்டு.
கடாக்ஷிப்பதும் இரங்கி அருள்வதும் அவன் திருவுள்ளத்தினால் ஆகும் அத்தனை அல்லது ஒருவருடைய பிரார்த்தனை மூலம் ஆக கூடியது அன்று. ஆனாலும் அது புருஷார்த்தமாக வேன்டியதற்காக அப்ரதிஷேத உத்யோதுகமாயும், சைதன்ய காயகாமையும் இத்தலையில் பிரார்த்தனை உண்டாகிறது.
நம்முடைய பிரார்த்தனைக்காக அவன் இறங்கினான் என்றோ கடாக்ஷித்தான் என்றோ தத்வ வித்துக்கள் ஒருக்காலும் நினையார்கள். நம்முடைய வாய் படைத்த பிரயோஜனம் பெறுவதற்காக நாம் எம்பெருமானை நோக்கி ஏதோ சொல்ல வேண்டியது கடமை ஆகிறது."ஸா ஜிஹவா யா ஹரிம்
ச்தௌதி " என்றபடி நாபடைத்த பிரயோஜனம் பெருகைக்கு எம்பெருமானை துதிக்க வேண்டியது அவர்ஜநீயமாஹிறது. " ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டதி அகர்மக்ருத் " என்று கீதாசார்யன் சொன்னபடி எதையாவது (த்ருனசெத கண்டூயனாதிகள் போன்ற கார்யங்களை) செய்து கொண்டும், வாய் மூடியிருக்க முடியாமல் பேசிக்கொண்டும் போதை போக்க வேண்டி இருக்கிறது. அங்கனே நிகழும் வாய் பேச்சுக்களிலே ' ந ஹி கல்யாண்கிருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி ' என்றதை நோக்கி நன்றான வார்த்தைகளை பேச விரும்பி பகவத் பாகவத ஆசார்ய விஷயங்களிலே நாவை செலுத்தி துதிகள் செய்கிறோம். அப்படிப்பட்ட துதிகளில் ஏதாவதொரு வினை முற்று (கரியா பதம்) இட வேண்டியதாகிறது. "உன்னை நான் அடைந்தேன் " உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேன்", உனக்கு அடிமை தொழில் பூண்டேன்", உன்னை எங்கனம் விடுகேன்?,"உனக்கு பல்லாண்டு கூறுவன், ஒரு நாள் காண வாராய்","என்னை நீ குறிக்கொள்ளே","ஒருவன் அடியேன் உள்ளான்" என்று இப்படி பலப்பலவகையாக பேசும் அடைவிலே "அடியேன் இடரை களையாயே", "நெடியாய் அடியேன் இடர் நீக்கே", "அடியேற்கு ஒரு நாள் இரங்காயே","தாமரை கண்களால் நோக்காய்", என்று இப்படியும் வார்த்தைகள் வெளி வருகின்றன.
இப்படி உலகம் அளந்தது, தென்னிலங்கை செற்றது, சகடம் உதைத்தது, கன்று குணிலா எறிந்தது, குன்று குடையா எடுத்தது, கையில் வேலால் வென்று பகை கெடுத்தது முதலான ஆறு அபதானங்கள் ஆச்சார்ய சார்வ பௌமரும் செய்த விஷயங்களை பற்றி உள்ளுறை பொருளாக விளக்கபடுகிறது.
(so many pages are there so i stop with this for this paasuram)
சௌ.வை.ராமன்
ஜனவரி 7, 2013
No comments:
Post a Comment